T 20 உலகக் கிண்ண போட்டிக்கான இலங்கை அணி

0

ஐ.சி.சி இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபையினால் இந்த அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க இந்த அணிக்கு தனது ஒப்புதலை வழங்கியுள்ளார்.

20 பேர் கொண்ட குறித்த அணியின் தலைவராக தசுன் ஷானக்க பெயரிடப்பட்டுள்ளார்.

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள், 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் 16 ஆம் திகதி முதல் நவம்பர் 13 ஆம் திகதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here