PUBG விளையாட்டிற்கு அடிமையாகிய சிறுவனால் குடும்பத்தினருக்கு நேர்ந்த கதி..!

0

பாக்கிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் தலைநகர் லாஹூரில் 45 வயதான சுகாதாரப் பணியாளர் நஹித் முபாரக், லாகூரில் உள்ள கஹ்னா பகுதியில் அவரது 22 வயது மகன் தைமூர் மற்றும் 17 மற்றும் 11 வயதுடைய இரண்டு மகள்களுடன் இறந்து கிடந்துள்ளார்.

அவரது 14 வயது மகனே குடும்பத்தில் உள்ள அனைவரையும் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளான்.

அச்சிறுவன் வீட்டில் தனியாக உட்கார்ந்து இருந்ததாக பொலிஸாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“PUBG (PlayerUnknown’s Battlegrounds) ஒன்லைன் கேமிற்கு அடிமையான அச்சிறுவன், அந்த விளையாட்டின் தாக்கத்தில் தன் தாயையும் உடன்பிறந்தவர்களையும் கொன்றதாக ஒப்புக்கொண்டான்.

நாள் முழுவதும் நீண்ட நேரம் ஆன்லைன் கேம் விளையாடுவதால் அவர் சில உளவியல் சிக்கல்களை உருவாக்கியுள்ளார்.

நஹித் விவாகரத்து பெற்றவர் என்றும், தனது படிப்பில் கவனம் செலுத்தாததற்காகவும், PUBG விளையாட்டில் அதிக நேரத்தை செலவிடுவதற்காகவும் சிறுவனை அடிக்கடி எச்சரித்துள்ளார்.

நஹித் இந்த விடயத்திற்காக சிறுவனை திட்டினார்.

பின்னர், சிறுவன் அலமாரியில் இருந்து தனது தாயின் கைத்துப்பாக்கியை எடுத்து, அவளையும் அவனது மற்ற மூன்று உடன்பிறப்புகளையும் தூக்கத்தில் சுட்டுக் கொன்றுள்ளான்.

ஆனால், அடுத்த நாள் காலை, சிறுவன் அழுது கூச்சலிட்டுள்ளான்.

அக்கம்பக்கத்தினர் பொலிஸை அழைத்தனர்.

உரிமம் பெற்ற அந்த கைத்துப்பாக்கி, அவரது குடும்பத்தின் பாதுகாப்பிற்காக நஹித் வாங்கியது.

கொலைகளை செய்துவிட்டு சிறுவன் வடிகாலில் வீசிய அந்த துப்பாக்கி இன்னும் மீட்கப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here