Omicron தொற்று பாதிப்பின் அறிகுறிகள் குறைவாக காணப்பட்ட போதிலும் வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில் வைரஸ் குறித்து சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் Omicron தொற்றால் பாதிக்கபட்டவர்களுக்கு புதிய அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் டெல்டா, டெல்டா பிளஸ், Omicron என்று பல்வேறு விதங்களில் உருமாறி வருகின்றது.
தற்போது பரவி வரும் கொரோனா வைரஸின் புதிய மாறுபாடான BA.2 என்று அழைக்கப்படும் வைரஸ் ஒமிக்ரானை விட அதிகம் பரவும் தன்மை கொண்டுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இரண்டு புதிய ஆய்வுகள் கண்டறியப்பட்டுள்ளது.
பொதுவாக stealth Omicron தொற்றால் பாதிக்கப்பட்டவகள் பலருக்கு சோர்வு, குமட்டல், தசை வலி, இருமல், காய்ச்சல் பசியின்மை மற்றும் தலைவலி உள்ளிட்ட அறிகுறிகள் தென்படுகின்றது.
தற்போது வெளியான புதிய அறிக்கையின்படி மயக்கம், வயிற்று போக்கு அல்லது தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகளும் Stealth Omicron வைரஸில் காணப்படுகின்றது.