Omicron வைரஸின் புதிய அறிகுறிகள்…! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

0

கொரோனா வைரஸ் குறிப்பிட்ட காலத்திற்கு பின் டெல்டா, டெல்டா பிளஸ், பீட்டா என்று உருமாற்றமடைந்துள்ளது.

இச்சூழலில் மற்றுமொரு புதிய வகை கொரோனா வைரஸ் Omicron என்ற பெயரில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது 130க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வருகிறது.

Omicron தொற்று பாதிப்பின் அறிகுறிகள் லேசானதாக இருந்தாலும் வேகமாக பரவி வருகிறது.

இந்த வைரஸ் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் குமட்டல் மற்றும் பசியின்மை என்ற இரண்டு அறிகுறிகள் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

Omicron தொற்றால் பாதிக்கப்பட்ட பலருக்கு சோர்வு, குமட்டல், தசை வலி, இருமல், காய்ச்சல் பசியின்மை, லேசான வெப்பநிலை, தொண்டை புண் மற்றும் தலைவலி உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

தொற்று அதிகப்படியான சோம்பலுக்கு வழிவகுக்கும்.

உங்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

Omicron மாறுபாட்டின் நான்காவது பொதுவான அறிகுறியாக தொண்டை புண் விளங்குகிறது.

தலைவலி பல்வேறு காரணங்களுக்காக ஏற்படலாம்.

இருமல் உள்ளவர்கள் சமீபத்தில் Omicron மாறுபாட்டிற்கு ஆளாகியிருப்பது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மருத்துவர்கள் தெரிவிக்கையில், Omicron தொடர்பான நோய்த்தொற்றுகள் மிகவும் லேசானவை.

இந்த தொற்றினால் பாதிக்கப்படும் போது தொண்டை பிரச்சினைகள், பசியின்மை போன்ற பொதுவான பலவீனம் காணப்படும்.

எனவே, Omicron-னின் அனைத்து அறிகுறிகளையும் கண்டறிந்து உரிய சிகிக்சை மேற்கொள்ள வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here