Malik புயலின் தாக்கம்… பிரித்தானியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

Malik புயலின் அபாயம்… பிரித்தானியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பிரித்தானியாவை Malik புயல் தாக்கவிருப்பதால், கனமழை மற்றும் பனிப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமைகளின் காலை வேளையில் பயங்கரமான காற்று வீசக்கூடும்.

மேலும் ஸ்காட்லாந்தில் பனிப்பொழி பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்காட்லாந்த், வடக்கு இங்கிலாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய பகுதிகளுக்கு மஞ்சள் நிற புயல் எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கிழக்கு ஸ்காட்லாந்தில் இந்த புயலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த புயலால் சாலைகள், ரயில்வே பாதைகள் மற்றும் விமான, கப்பல் போக்குவரத்துகள் போன்றவை பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மின்தொடர்புகள் மற்றும் தொலைபேசி இணைப்புகள் போன்றவையும் தடைப்பட வாய்ப்புள்ளது.

இதனை தொடர்ந்து இப்பகுதிகளுக்கு ஆம்பர் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here