Kgf 2 பட நடிகர் திடீர் மரணம்- அதிர்ச்சியில் ரசிகர்கள்

0

கேஜிஎப்’ மற்றும் ’கேஜிஎஃப் 2’ படங்களில் நடித்த பிரபல நடிகர் ஒருவர் இன்று மரணமாகி உள்ளதை அடுத்து படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் .

கேஜிஎஃப் படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்த கன்னட நடிகர் மோகன் ஜூனேஜா என்பவர் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 54. கடந்த சில நாட்களாக அவர் உடல் நலம் சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்ததாகவும் சிகிச்சை பலனின்றி பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் இன்று அவர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேஜிஎப் திரைப்படத்தில் ராக்கி பாய் பெருமைகளைப் பேசும் கதாபாத்திரமாகவும் பத்திரிகையாளர்களிடம் ராக்கிபாய் கதையை சொல்லும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த மோகன் ஜூனேஜா, கேஜிஎப் மட்டுமின்றி பல கன்னட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருடைய மறைவு கன்னட திரை உலகில் மிகப்பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது. மறைந்த நடிகர் மோகன் ஜூனேஜா இறுதிச்சடங்கு இன்று அவருடைய சொந்த ஊரில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது .

ஒரு பக்கம் ‘கேஜிஎப் 2’ திரைப்படம் உலகம் முழுவதும் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்துள்ள நிலையில் இன்னொரு பக்கம் அந்த படத்தில் நடித்த முக்கிய நடிகர் மோகன் ஜூனேஜா மறைந்தது படக்குழுவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here