HIV பாதிக்கப்பட்ட காதலன்…. 15 வயது சிறுமியின் விபரீத செயல்…

0

இந்தியாவில் அசாம் மாநிலத்தில் எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட காதலனின் இரத்தத்தை தனது உடலில் 15 வயது சிறுமி செலுத்தி கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி 15 வயது சிறுமிக்கும், எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவருக்கும் பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது.

இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிய முடியாத அளவிற்கு உயிராக காதலித்தனர்.

இந்நிலையில் எச்.ஐ.வி-பாசிட்டிவ் காதலனின் உடலில் இருந்து சிரிஞ்ச் மூலம் இரத்தத்தை எடுத்து தனது உடலில் செலுத்தி கொண்டிருக்கிறார்.

தனது காதலை நிரூபிக்க இவ்வாறு அவர் செய்திருக்கிறார்.

இதைப் பற்றி கேள்விப்பட்டவுடன் அவர் வசிக்கும் பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதற்கிடையில், பொலிசார் சிறுமியின் காதலரான இளைஞரை கைது செய்துள்ளனர்.

மேலும் சிறுமி தற்போது மருத்துவ கண்காணிப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here