CSK அணி வீரர்களுக்கான புதிய உடை

0

2022 ஐபிஎல் 15 வது சீசன் வரும் 26 ஆம் திகதி தொடங்குகிறது.

இந்த சீசனில் ஏற்கனவே உள்ள அணிகளோடு லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 அணிகளும் புதிதாக களமிறங்குகின்றன.

மொத்தமாக 10 அணிகள் ஆடுவதால் இந்த சீசன் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். ஐபிஎல் அணிகளிலேயே அதிக ரசிகர்கள் பலத்தை கொண்ட ஒரு அணியாக டோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது.

அந்த அணி வீரர்கள் அணியும் புதிய ஜெர்சி உடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான புகைப்படத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அதிகாரபூர்வ டுவிட்டர் கணக்கில் வெளியிட்டுள்ளது.

எப்போதும் போல மஞ்சள் நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள ஜெர்சி டிசைனில் சிறியளவு மாற்றங்கள் மட்டும் செய்யப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here