இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரரின் மோசமான செயல்

0

இலங்கையில் சீகிரிய பிரதேசத்தில் பெறுமதியான காணியை சட்டவிரோதமாக பெற்ற உலக புகழ்பெற்ற இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் எனத் தெரியவந்துள்ளது.

குறித்த கிரிக்கெட் வீரர் தனது மனைவியின் பெயரில் காணி பெற்றுக் கொண்டுள்ளார்.

அதற்காக அரச அதிகாரிகள் இருவரின் உதவியும் கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த பெண் குறைந்த வருமானம் பெறும் பெண் என அடையாளப்படுத்தி காணி பெற முயற்சித்துள்ளார் என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த காணி கொள்வனவு செய்தமை தொடர்பில் நேற்று முன்தினம் மாத்தறை மாவட்ட இணைப்பு குழு கூட்டத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணை மேற்கொண்டு காணிக்காக உறுதி பத்திரத்தை இரத்து செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஆலோனை வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here