9 ஆவது மாடியில் இருந்து தவறி வீழ்ந்து அமெரிக்க அழகி பலி

0

அமெரிக்க அழகியான செஸ்லி கிரைஸ்ட் (Cheslie Kryst) கட்டடமொன்றின் 9 ஆவது மாடியில் இருந்து தவறி கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

செஸ்லி கிரைஸ்ட் (30) கடந்த 2019 ஆம் ஆண்டு வட கரோலினா பகுதியில் நடைபெற்ற அமெரிக்க அழகி போட்டியில் வெற்றிபெற்று, மகுடம் சூடினார்.

நியூயோர்க் நகரில் உள்ள 60 மாடி கொண்ட குடியிருப்பு தொகுதியொன்றில் வசித்து வந்தவர்.

அவர், நேற்று ஞாயிற்றுக்கிழமை அக் கட்டடத்தின் 9 ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இவரது மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பது தொடர்பில் மருத்துவப் பரிசோதனை முடிவுக்கு பின்னரே தெரிய வரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர் சட்டத்தரணியாக கடமையாற்றி வந்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு அமெரிக்க அழகியாக பட்டம் வென்ற பின்னர், அவர் தமது சட்டத்தரணி பணியை கைவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

செஸ்லி கிரைஸ்ட் இறப்பதற்கு முன்னர் அவரின் இன்ஸ்டாகிராம் கணக்கில் “இந்த நாள் உங்களுக்கு ஓய்வையும் அமைதியையும் தரட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

அவரின் மறைவுக்கு நடப்பாண்டின் பிரபஞ்ச அழகி (Miss Universe) பட்டம் வென்ற ஹர்னாஸ் சந்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here