86 வயது மூதாட்டியை தத்தெடுத்த தம்பதி…! கனடாவில் நடந்த சம்பவம்

0

கனடாவை சேர்ந்த ஓரினச்சேர்க்கையாளர்களான Marike Finlay மற்றும் Karin Cope, 86 வயது மதிக்கத்தக்க Elizabeth Bigras-யை தத்தெடுத்துக் கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

தங்களுடன் பணிபுரிந்த Julien என்பவரின் மூலம் அவரது மனைவியான Elizabeth Bigras, Marike Finlay தம்பதியினருக்கு அறிமுகமாகியுள்ளார்.

இரு குடும்பமும் நட்பாக பழகி வந்த நேரத்தில் Julien காலமானார்.

இதனையடுத்து Elizabeth Bigras-ன் நெருங்கிய பழகிய Marike Finlay தம்பதியினர் அவரை தத்தெடுக்க முடிவெடுத்தனர்.

கடைசி காலத்தில் தனிமையில் தவிக்க கூடாது என்பதை உணர்ந்து அவர்கள் இந்த முடிவை எடுத்தனர்.

ஏனெனில் அத்தம்பதியினருக்கு குழந்தைகள் ஏதும் இல்லை, வயதான காலத்தில் முதியோர் இல்லத்தில் வசிக்க வேண்டும் என்பதை உணர்ந்து இந்த முடிவு எடுத்துள்ளனர்.

இதற்கு Elizabeth Bigras-ம் சம்மதம் தெரிவிக்க, மூவரும் ஒரு குடும்பமாய் இணைந்து தங்களது வாழ்நாட்களை மகிழ்ச்சியாக கழித்து வருகின்றனர்.

தன்னுடைய விருப்பம் போலவே நடந்துவிட்டதாக கூறும் Elizabeth Bigras, புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் மிக்கவர்.

இதன்படியே தன்னுடைய கமெராக்கள் மூலம் அழகான நினைவுகளை கிளிக் செய்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here