85 ஸ்பூன்களை உடலில் சமநிலைப்படுத்தி கின்னஸ் சாதனை…

0

ஈரானின் AKraj என்ற பகுதியை சேர்ந்த Abolfazl Saber Mokhtari என்பவர், உடலில் 85 ஸ்பூன்களை சமநிலைப்படுத்தி உலக கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

இதுகுறித்து Mokhtari(50) தெரிவிக்கையில், சிறுவயது முதலே தனது உடலில் ஸ்பூன்களை சமநிலை செய்வதில் ஆர்வம் உண்டு

அதன் தொடர் பயிற்சியின் விளைவாக இன்று இந்த கின்னஸ் சாதனை படைத்துள்ளேன்.

மேலும் தனது உடம்பில் எந்த ஒரு பொருளையும் சமநிலை செய்யும் சக்தி இருக்கின்றது.

பிளாஸ்டிக், கிளாஸ்,ஸ்டோன், வுட் போன்ற எதுவாக இருந்தாலும் சமநிலை செய்யமுடியும் என்று தெரிவித்துள்ளார்.

தனது உடலின் ஆற்றலை தன் மேல் உள்ள பொருள்களின் மீது தான் திசை திரும்புகிறேன்.

அதனால் அந்த பொருள்களை என்னால் தொடவும் உணரவும் முடிகிறது.

இதுவே நான் இன்று இந்த கின்னஸ் சாதனை படைக்க முதற்காரணம் என தெரிவித்துள்ளார்.

Mokhtari 50 ஆவது வயதில் இந்த சாதனையை செய்வதற்கு முன்பு ஸ்பெயின் சேர்ந்த Marcos Ruiz Ceballos என்பவர் தனது உடலில் 64 ஸ்பூன்களை சமநிலை செய்து கின்னஸ் சாதனை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here