8000 ஆண்டுகள் பழமையான மனிதனின் மண்டை ஓடு கண்டுப்பிடிப்பு…!

0

அமெரிக்காவில் ஆராய்ச்சியாளர்கள் 8000 ஆண்டுகள் பழமையான மனிதனின் மண்டை ஓட்டினைகண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்காவின் ரென்வில்லி மாகாணத்தில் கடந்த கோடைகாலத்தின் போது மின்னெசோட்டா ஆற்றுப்படுக்கையின் மீது பயணம் செய்த இரண்டு பேர் ஒரு மனித மண்டை ஓட்டை கண்டுள்ளனர்.

சந்தேகத்தின் அடிப்படையில் அதனை மருத்துவ சோதனையாளர் மற்றும் எப்ஃபிஐ அதிகாரிகளிடம் கொடுத்துள்ளனர்.

அங்கு அந்த மண்டை ஓட்டின் மீது நடத்தப்பட்ட கார்பன் பகுப்பாய்வில் கிமு 5500 மற்றும் கிமு6000 நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த இளைஞனின் மண்டை ஓடு என்பது தெரிய வந்துள்ளது.

அந்த இளைஞரின் தலையில் கொடுக்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என்று மானுடவியலாளர்கள் தெரிவித்துள்ளார்.

இதுபற்றிய தகவல்களைப் பகிர்ந்திருந்த ஷெரிஃப் ஸ்காட் என்பவர் அத்துடன் புகைப்படங்களையும் இணைத்திருந்தார்.

முன்னோர்களின் எச்சங்களை வெளியிடுவது கலாச்சாரத்திற்கு எதிரானது என்று பூர்வகுடி அமெரிக்கர்களின் கண்டனத்திற்கு உள்ளானதால் அந்த பதிவை அவர் நீக்கியிருக்கிறார்.

அந்த மண்டை ஓடானது இன்னும் அப்பகுதியில் வாழும் அமெரிக்க பழங்குடியினரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுடையதாக இருக்கலாம் என்று கத்லீன் ப்ளூ என்ற பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

மண்டை ஓட்டுக்கு உரிய அந்த நபர் இப்போது மின்னசோட்டாவாக இருக்கும் அந்த பகுதியில் சில ஆண்டுகளாக அவர் தங்கியிருக்கலாம் என்றும் அந்த நபர் தாவரங்கள், மான், மீன், ஆமைகள் ஆகியவற்றை உண்டிருக்கலாம் என்று கூறியுள்ளார்.

பாலூட்டிகள், காட்டெருமைகளை உண்பவராக இருந்திருந்தால் தொடர்ச்சியாக இடம் பெயர்ந்திருக்கக் கூடும்.

அதே பகுதியில் 13000 ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் வாழ்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்று அகஸ்தனா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் ஆஸ்டின் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here