800 வாகனங்கள் தொடர்பில் வெளியாகிய தகவல்

0

இலங்கை சட்டத்தை மீறி வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த அனைத்து வாகனங்களையும் விடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக இலங்கை சுங்க பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கான வரவு செலவுத்திட்ட யோசனையை செயற்படுத்துவதற்காக வாகனங்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுங்க திணைக்கள பணிப்பாளர் ஜீ. வீ. ரவிபிரிய தெரிவித்துள்ளார்.

சட்ட விதிகளை மீறி இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு அபராதம் மற்றும் வரிகளில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

தற்போது சுங்கத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 262 வாகனங்கள் தேவையான அபராதம் மற்றும் வரிகளை வசூலிக்கப்படும்.

அதன் பின்னர் இந்த மாத இறுதிக்குள் விடுவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

சட்ட விதிகளை மீறி இறக்குமதி செய்யப்பட்ட 800 வாகனங்களும் அபராதம் மற்றும் வரியுடன் விடுவிக்கப்படும் என்று கூறிய அவர், சில சந்தர்ப்பங்களில் சட்டமா அதிபரின் ஆலோசனை தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here