உக்ரைன் நடத்திய தாக்குதலில் 800 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
உக்ரைன் பாதுகாப்பு துணை அமைச்சர் ஹன்னா மல்யார் இதனை அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளார்.
மேலும் ஏழு ரஷ்ய விமானங்கள் மற்றும் ஆறு ஹெலிகாப்டர்களுடன் 30 க்கும் மேற்பட்ட ரஷ்ய டாங்கிகளை அதன் ஆயுதப் படைகள் அழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய படையெடுப்பில் இதுவரை 10 இராணுவ அதிகாரிகள் உட்பட 137 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த தகவலை அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளமை குறிப்பிட்டுள்ளது.