பிரித்தானியாவின் சசெக்ஸ் பகுதியை சேர்ந்த சூசன் ஹேவன்ஹான் RSPCAவின் ஓமேஸின் பிரச்சாரத்தில் வெறும் 10 பவுண்டுகளை மட்டுமே செலுத்தி மிகப்பெரிய பங்களா மாளிகையை பரிசாக வெற்றி பெற்றுள்ளார்.
ஓமேஸ்(Omaze’s) நிறுவனம் சூசன் ஹேவன்ஹான் (71) மற்றும் ஜான் (70) தொடர்பு கொண்டு பரிசு விவரங்களை தெரிவித்துள்ளனர்.
தெற்கு பிரான்சில் விடுமுறையை கழித்து கொண்டு இருந்த அவர்கள் அதனை பெரிதாக நம்ப மறுத்து மது அருந்த சென்றுள்ளனர்.
இதனால் அவரது மகள் ஹாரியட்யை(Harriet) தொடர்பு கொண்ட ஓமேஸ் அதிகாரிகள் தகவலை தெரிவித்துள்ளனர்.
அவரது பெற்றோர்களுக்கு அவர்களது வெற்றியை தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து 10 பேரக்குழந்தைகளுக்கு பாட்டியான சூசன் (71) மற்றும் ஜான் (70) இருவரும் தனது குடும்பத்திடன் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
சுமார் 35 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள கனவு பங்களாவில் சொந்த உடற்பயிற்சி கூடம், டென்னிஸ் கோர்ட், குளம் மற்றும் சினிமா திரையரங்கம் போன்ற பல சிறப்பம்சங்கள் கொண்டுள்ளது.
மேலும் மிகப்பெரிய 6 படுக்கையறைகளை கொண்ட இந்த பங்களாவில், மிகச்சிறந்த கலை நுட்பத்துடன் கூடிய சமயலறை, பூந்தோட்டம், என பல வசதிகள் கொண்டுள்ளன.
