7 வயது சிறுவன் அடித்துக்கொலை….! தாய் மற்றும் 3 பெண்கள் கைது!

0

இந்தியாவில் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்த 7 வயது சிறுவன், சில காலம் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அவரது உறவினர்கள் சிறுவனின் உடலில் பேய் இருப்பதாக கூறியுள்ளனர்.

அதனை விரட்டுவதாகக் கூறி மூன்று பெண்கள் அடித்து கொடுமைப்படுத்தியுள்ளனர் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சிறுவன் கீழே மயங்கி விழுந்துள்ளான்.

பின்னர் உறவினர்கள் சென்று சிறுவனை எழுப்பியபோது, அவன் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சிறுவனுக்கு ஏற்பட்ட சாதாரண உடல் நலக்குறைவை பேய் பிடித்துள்ளதாகக் கூறி, தாக்கிக் கொலை செய்த குற்றச்சாட்டில் குறித்த 3 பெண்கள் மீதும் காவல்நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

முறைப்பாட்டுக்கமைய, அடிப்படையில் சிறுவனின் தாய் உட்பட 3 பெண்களை கைது செய்த காவல்துறையினர், உயிரிழந்த சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், சிறுவன் வலிப்பு வந்து இறந்துவிட்டதாக கைதான மூன்று பெண்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இந்நிலையில், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here