7 வயது சிறுமியை கடத்திய தந்தை… கனடாவில் அரங்கேறிய சம்பவம்

0

கனடாவில் தடுப்பூசி மறுப்பாளரான தந்தை ஒருவர் தமது 7 வயது மகளை, தாயாரிடம் இருந்து கடத்தி சென்றுள்ள சம்பவம் நடந்துள்ளது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் தமது முன்னாள் கணவரால் 7 வயதேயான மகள் கடத்தப்பட்டதாக கூறும் Mariecar Jackson, இதுவரை தமது மகள் தொடர்பில் எந்த தகவலும் கிடைக்க வில்லை.

7 வயதான சிறுமியை இவ்வாறு மறைவாக வைத்திருப்பது பொருத்தமான செயல் அல்ல என தாய் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக சிறுமி சாராவுக்கு தடுப்பூசி அளிக்க அவரது தாயார் விரும்பியுள்ளார்.

ஆனால் தடுப்பூசி மறுப்பாளரான அவரது தந்தை அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த நவம்பர் மாதம் சிறுமி சாராவை அழைத்து சென்றவர் திரும்ப ஒப்படைக்கவில்லை என கூறப்படுகிறது.

சமீபத்தில் ஊடக விவாதம் ஒன்றில் கலந்துகொண்ட அந்த தந்தை, தடுப்பூசிக்கு எதிராக தமது கருத்துகளை முன்வைத்துள்ளார்.

அதே வேளை, குறித்த சிறுமியும், தடுப்பூசி டி.என்.ஏ அமைப்பை மாற்றிவிடும்.

தடுப்பூசி போட்டுக்கொள்வதால் நாளடைவில் பெருந்துயரமாக அது மாறக் கூடும் எனவும், கொஞ்சம் கொஞ்சமாக நம்மை அது கொல்லும் என அந்த ஊடக விவாதத்தில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here