7 மாத குழந்தையை தீக்கிரையாக்கிய கொடூரத் தாய்…. பதறவைக்கும் சம்பவம்!

0

இந்தியாவில் ஹைதராபாத்தின் ஹயாத்நகரில் வசித்து வருபவர் சுவர்ணா.

இவருக்கு ஏழு மாதத்தில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் சுவர்ணா தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில் தனது குழந்தை மீதும் தன் மீதும் சானிடைசரை ஊற்றி தீ வைத்துள்ளார்.

இவர்களது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த கொடூர சம்பவத்தில் சுவர்ணா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில் ஏழு மாத குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து பொலிஸ் நடத்திய விசாரணையில் கணவர் வேலையில்லாமல் இருந்தமையால் இருவருக்கிடையில் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜனவரி 11 ஆம் திகதி அன்று சண்டை மிகவும் மோசமாக நடைபெற்றுள்ளது.

இதனால் ஏற்பட்ட கோபத்தில்டிஅவரது கணவர் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.

அவர் வெளியே சென்ற நேரத்தில் சுவர்ணா குழந்தையை இணைத்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

மேலும் மருத்துவமனை வெளியிட்ட அறிவிக்கையில், குழந்தை 70 சதவிதமும், தாய் சுவர்ணா 40 சதவிதமும் எரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here