67வது தேசிய திரைப்பட விருது விழாவில் விருது வென்ற தமிழ் திரைப்படங்கள்!

0

சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகர், சிறந்த பிராந்திய திரைப்படங்கள் உள்படபல்வேறு பிரிவுகளின் கீழ் ஆண்டுதோறும் தேசிய விருதுகள் வழங்கப்படுகிறது. கொரோனா காரணமாக கடந்த ஆண்டு விழா நடைபெறாமல் இருந்த நிலையில், 2019ம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா
டெல்லியில் உள்ள விக்யான் பவனில் இன்று பெற்றது.

சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது ‘அசுரன்’ திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது.
அசுரன் பட இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் தயாரிப்பாளர் தாணு ஆகியோர் தேசிய விருதை குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவிடம் பெற்றுக்கொண்டனர்.

பார்த்திபன் இயக்கத்தில் உருவான “ஒத்த செருப்பு” படத்திற்கு “சிறப்பு நடுவர் தேர்வு விருது” வழங்கப்பட்டது.

சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது டி.இமானுக்கு வழங்கப்பட்டது.
விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற “கண்ணான கண்ணே..” பாடலுக்காக டி.இமானுக்கு தேசிய விருது

சிறந்த நடிகருக்கான தேசிய விருதை, அசுரன் படத்திற்காக பெற்றார் நடிகர் தனுஷ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here