65 வயது பாட்டியுடன் காதல்….. திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த பிள்ளைகள்

0

மைசூருவில் 65 வயது பாட்டியை, 85 வயது தாத்தா கல்யாணம் செய்து சுவாரஸ்ய சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

இந்தியாவில் மைசூரு டவுன் உதயகிரி கவுசியா நகர் பகுதியை சேர்ந்தவர் முஸ்தபா 85 வயது சொந்தமாக மட்டன் கடை வைத்திருக்கிறார்.

பிள்ளைகள் அனைவரும் திருமணமாகி சென்றுவிட்டதால், முஸ்தபாவும், மனைவி குர்ஷித் பேகமும் மட்டும் தனியாக வசித்து வந்திருக்கிறார்கள்.

கடந்த 2 வருடங்களுக்கு முன்பு குர்ஷித் பேகம் இறந்துவிட்டார்.

இதன்பின்னர் அந்த வீட்டிற்குள்ளேயே தனியாகவே வசித்து வந்துள்ளார்.

னிமை அவரை வாட்டியதனால் தனக்கு ஒரு துணை தேவை என்று முஸ்தபா உணர்ந்தார்.

இதையடுத்து அதே பகுதியில் வசித்து வந்த பாத்திமா பேகம் (65 வயது) என்ற பாட்டியும் தனிமையில் வசித்து வந்துள்ளார்.

வயதான காலத்தில் துணைகளை இழந்த இருவரும், நன்றாக பழகி வந்துள்ளனர்.

இதனையடுத்து திருமணத்துக்கு தங்கள் பிள்ளைகளிடம் முஸ்தா தன்னுடைய விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

அவர்கள் அனைவருமே தாத்தாவின் விருப்பத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்

அனைத்து குடும்ப உறுப்பினர்களும் முன்னின்று முஸ்தபாவுக்கும், பாத்திமா பேகத்திற்கும் திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர்.

புதுமண தம்பதியிடம், மொத்த குடும்பத்தினரும் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி கொண்டனர்.

இப்போது மணமக்கள் சந்தோஷமாக தங்கள் வாழ்க்கையை ஆரம்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here