இந்திய இமாசல பிரதேசத்தில் 600 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ள.
அதில் 9 பேர் பலியாகியுள்ளனர்.
இமாசல பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் உள்ள தீசா பகுதியில் நேற்று தனியார் பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.
குறித்த பேருந்தில் 20க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.
இந்நிலையில், அந்த பேருந்து காலை 10.15 மணியளவில் காலனிமோர் என்ற பகுதி அருகே சென்று கொண்டிருந்த போது, திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள 600 அடி பள்ளத்தாக்கில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
11 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.