6 வயது சிறுவனின் உடலில் திடீரென தோன்றிய தேமல்! பதறிய பெற்றோர்!

0

பிரித்தானியாவின் Blackwood நகரை சேர்ந்தவர் Danielle Everson, இவருக்கு 6 வயதில் Kian மற்றும் Kelan என்ற இரட்டை குழந்தைகள் இருக்கின்றனர்.

கிறிஸ்துமஸ் தினத்தை மிக மகிழ்ச்சியாக அனைவரும் கொண்டாடியுள்ளனர்.

இந்நிலையில் அந்த தாய்க்கு அந்நன்னாளில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது.

Kian -ன் உடலில் ஒரு விசித்திரமான தேமல் இருப்பதை பார்த்துள்ளார்.

அதாவது தனது மகனின் உடலில் சிறிய ஊதா நிற முள் போன்று புள்ளிகள் இருந்துள்ளது.

உடனே இது தொடர்பாக தகவல்களை பற்றி தெரிந்துகொள்ள Google பக்கம் அதனை தேட ஆரம்பித்துள்ளார்.

Leukaemia என்ற புற்றுநோயின் அறிகுறி தான் இது என தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தன்னுடைய உறவினரை தொடர்பு கொண்டு இதைப்பற்றி தெரிவித்த போதும், அவரோ நீங்கள் பதட்டப்பட வேண்டாம் கூகுள் சொல்வதை முழுவதாக நம்ப வேண்டாம் தைரியமுடன் இருங்கள் என ஆறுதல் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் 111 என்ற அவசர எண்ணுக்கு தொடர்பு கொண்டு, Kian யை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கே அவனுக்கு ஆரம்ப நிலையில் புற்றுநோய் இருப்பது உறுதியானது.

மிக சரியான நேரத்திற்கு Kian யை மருத்துவமனைக்கு கொண்டு வந்தததற்காக மருத்துவர்கள் பாராட்டியதுடன், கீமோதெரபி சிகிச்சைகளை தொடர்ந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here