581 ஆண்டுகளின் பின் இன்று நீண்டநேர சந்திர கிரகணம்! இலங்கையர்களுக்கு காணும் வாய்ப்பு கிட்டுமா?

0

581 ஆண்டுகளின் பின்னர் நீண்டநேர சந்திர கிரகணம் இன்று நிகழவுள்ளதாக நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன்போது சந்திரன் 99 சதவீதம் சிவப்பு நிறத்தில் தென்படவுள்ளது.

இந்த சந்திர கிரணம், இலங்கை நேரப்படி இன்று முற்பகல் 11.32க்கு ஆரம்பமாகி, 3 மணித்தியாலங்களும், 28 நிமிடங்களும் நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

எனினும், இந்த சந்திர கிரணத்தின் முழுமையான காலம் ஆறு மணித்தியாலங்களும், ஒரு நிமிடமுமாகும்.

இந்த சந்திர கிரகணம் இலங்கையில் தென்படாது. எனினும் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, பொலினிசியா, அவுஸ்திரேலியா மற்றும் வடகிழக்கு ஆசியாவின் பல பகுதிகளிலும் இது தென்படவுள்ளது.

இதுபோன்ற சந்திர கிரகணம் மீண்டும் 648 ஆண்டுகளின் பின்னர், அதாவது 2,669 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நிகழவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here