54 வயதில் திருமணமா..? SJ சூர்யா எடுத்த அதிரடி முடிவு..!

0

தமிழ் திரையுலகில் நடிகர், இயக்குனர்,தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என பல திறமைகளை கொண்டவர் தான் எஸ்.ஜே.சூர்யா. இவர் முதன் முதலில் வாலி மற்றும் குஷி திரைப்படத்தை இயக்கி பல வெற்றிகளை கொடுத்துள்ளார். இன்றளவும் கூட அத்திரைப்படங்கள் பேசப்பட்டு தான் வருகிறது.
அதன் பிறகு நியூ,அன்பே ஆருயிரே என பல திரைப்படங்களில் நடிகராகவும் நடிக்க ஆரம்பித்தார். சில பல காரணங்களால் தமிழ் சினிமாவை விட்டு விலகி இருந்த நடிகர் எஸ் ஜே சூர்யா அவர்கள் இசை படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்து ரசிகர்களை அதிர்ச்சடைய வைத்தார்.

அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. நடிகராக மட்டுமல்லாமல் வில்லனாகவும் பல திரைப்படங்களில் நடித்த காரணத்தினால் இவருக்கு ரசிகர்கள் ஆதரவு கொடுக்க ஆரம்பித்தனர். அதன் தொடர்ச்சியாக தான் ஸ்பைடர், மெர்சல், மாநாடு என பல திரைப்படங்களில் வில்லனாக நடித்து பலரையும் மிரட்டி வந்தார்.

தற்பொழுது இவருக்கு 54 வயதாகிறது. ஆனால் இன்றளவும் திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் வாழ்ந்து வருகிறார். விரைவில் நடிகர் எஸ் ஜே சூர்யா அவர்களுக்கு திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவரது குடும்பத்தினர் தீவிரமாக பெண் தேடுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் இதைப் பற்றி நடிகர் எஸ் ஜே சூர்யா அவர்கள் எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வயதில் யார் தான் பெண் கொடுப்பான் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here