54 நாட்களின் பின்னர் விடுதலையாகிய ரிஷாட் பதியுதீனின் மனைவி!

0

கடந்த ஜூலை மாதம் 23ம் திகதி கைது செய்யப்பட்டு சுமார் 54 நாட்கள் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவி மற்றும் மனைவியின் தந்தை இருவரும் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மலையகத்தை சேர்ந்த 16 வயது ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை தொடர்ந்தும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here