5 மாடிக் கட்டடத்தில் பாரிய தீப்பரவல்! சிறுவர்களுக்கு நேர்ந்த கதி

0

துருக்கியில் இஸ்தான்புல் நகரில் எசென்யுர்ட் மாவட்டத்தில் 5 மாடிக் கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவில் 4 சிறுவர்கள் பலியாகியுள்ளனர்.

இன்று 15 ஆம் திகதி காலை திடீரென ஏற்பட்ட இந்த தீப்பரவலில் மேலும் 2 பேர் காயமடைந்துள்ளனர்.

அந்த சிறுவர்களின் தாய்மார்களும், மற்றுமொரு சிறுவனும் உயிருடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here