4 மாத குழந்தையுடன் போதை பொருள் பயன்படுத்திய ஐவர் பலி….

0

4 மாத குழந்தையுடன் போதை பொருள் பயன்படுத்திய ஐவர் பலி….

அமெரிக்காவின் கொலராடோ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நான்கு மாத குழந்தையுடன், சட்டவிரோதமான போதைப்பொருள்களை பயன்படுத்திய ஐவர் உயிரிழந்துள்ளனர்.

கொலராடோ மாகாணத்தில் உள்ள நார்த் ரேஞ்ச் கிராசிங்ஸ் குடியிருப்பு பகுதியில் இருந்து கமெர்ஸ் நகர பொலிஸாருக்கு சுயநினைவற்ற ஒருவரிடம் இருந்து தகவல் கிடைத்துள்ளது.

அதனை தொடர்ந்து அந்தப்பகுதிக்கு கமெர்ஸ் நகர பொலிஸார் விரைந்தனர்.

ஆனால் அதற்குள் விழித்துக்கொண்ட குழு ஒன்று மருத்துவ உதவிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இதன்படி அந்த குடியிருப்பு பகுதியில் இருந்த மற்றொரு குழுவில் இருந்த 6 நபர்களில் 5 நபர்கள் சட்டவிரோதமான போதைப்பொருள்கள் பயன்படுத்தியதில் உயிரிழந்துள்ளனர்.

அதில் கண்விழித்த மற்றொரு நபருடன் ஒரு 4 மாத குழந்தை இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கமெர்ஸ் நகர தலைமை காவலாளர் கிளின்ட் நிக்கோலஸ் தெரிவிக்கையில்,

இந்த நிகழ்வில் சட்டவிரோதமாக போதைப்பொருள் பயன்படுத்திய 5 நபர்கள் பலியாகியுள்ளனர்.

, அதில் மூன்று பேர் பெண்கள் மற்றும் 2 ஆண்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here