4வது முறையாக கோப்பையை கைப்பற்றியது சிஎஸ்கே!

0

14-வது ஐ.பி.எல். சீசனின் 2-வது கட்ட லீக் போட்டிகள் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி அக்டோபர் 15-ந் தேதி வரை நடைபெறுகிறது.

துபாயில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின, இதில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது. டூ பிளெசிஸ் 59 பந்தில் 7 பவுண்டரி 3 சிக்ஸர் உள்பட 86 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் அட்டமிழந்தார் ஆனார், மொயீன் அலி 37 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பில் சுனில் நரைன் 2 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அதிரடியாக ஆடினர். வெங்கடேஷ் அய்யர் 32 பந்தில் 6 பவுண்டரி 3 பவுண்டரி உள்பட 50 ரன் எடுத்து அட்டமிழந்தார். நிதிஷ் ரானா ரன் ஏதும் எடுக்காமல் அட்டமிழந்தார். சுனில் நரேன் 2 ரன்னில் வெளியேறினார். ஷுப்மான் கில் 43 பந்தில் 6 பவுண்டரி உள்பட 51 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அடுத்து அடுத்து விக்கெட் சரிந்தது. இறுதியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்று 4வது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் ஷர்துல் தாக்குர் 3 விக்கெட், ஹேசில்வுட், ஜடேஜா தலா 2 விக்கெட்டும், தீபக் சாஹர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here