38 வயதில் காதல் திருமணம் செய்த தமிழ் நடிகை!

0

தமிழ் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஒருவர் 38 வயதில் காதல் திருமணம் செய்து கொண்ட தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

தமிழில் ஸ்ரீகாந்த் நடித்த ’மனசெல்லாம்’ ’ஏப்ரல் மாதத்தில்’ ஜெயம் ரவி நடித்த ’தில்லாலங்கடி’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சந்திரா லட்சுமணன். இவர் பல மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் தற்போது மலையாள தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை சந்திரா தன்னுடன் தொலைக்காட்சி தொடரில் நடித்த டோஷ் கிரிஸ்டி என்பவரை காதலிப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன் சமூக வலை தளங்களில் பதிவு செய்து இருந்தார். இதனை அடுத்து விரைவில் இவர்களது திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று ரோஷ் கிரிஸ்டி மற்றும் சந்திரா லட்சுமணன் திருமணம் கேரளாவில் நடந்தது. இந்த திருமணத்தில் இரு தரப்பு நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை சந்திரா லட்சுமணன் திருமண புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here