38 மனைவிகள் கொண்ட குடும்ப தலைவர் மரணம்….

0

உலகின் மிகப் பெரிய குடும்பத்தின் தலைவராக கருதப்படும் இந்தியாவைச் சேர்ந்த சியோனா சனா தனது 76 ஆவது வயதில் காலமானார்.

38 மனைவிகள், 89 பிள்ளைகள், 33 பேரப்பிள்ளைகள் கொண்ட குடும்பத்தின் தலைவராக சியோனா சனா இருந்துள்ளார்.

இந்தியாவில் அவர் வசித்த மிசோரமின் மாநிலத்திலுள்ள பக்தாங் தலாங்னுவம் கிராமம் சுற்றுலா பயணிகளைக் கவரும் இடமாக உள்ளது.

சியோனா சனா 1945 ஆம் ஆண்டு ஜூலை 21 ஆம் திகதி பிறந்துள்ளார். அவர் தனது 17 ஆவது வயதில் தன்னைவிட மூன்று வயது மூத்தவரான ஜாதியாங்கியை முதல் மனைவியாக திருமணம் செய்தார்.

உலகின் மிகப்பெரிய குடும்பத்திற்கு சொந்தக்காரரான அவர் கடந்த சில நாட்களாக சுகயீனமுற்றிருந்த நிலையில் நேற்று 13 ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் அவருடை மறைவிற்கு மிசோரம் மாநில முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here