35 பெண்களுக்கு ஒரே நேரத்தில் அதிர்ச்சி கொடுத்த நபர்…!

0

ஜப்பானின் கன்சாய் பிராந்தியத்தை சேர்ந்த 39 வயதான Takashi Miyagawa என்பவரை பொலிசார் சில நாட்களுக்கு முன்னர் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் 35 பெண்களை ஒரே நேரத்தில் ரகசியமாக காதலித்து வந்துள்ளார்.

அவர்களிடம் இருந்து பிறந்தநாள் பரிசாக சுமார் 950 டொலர் அளவுக்கு பொருட்களை பெற்றுக் கொண்டும் உள்ளார்.

தமது 35 காதலிகளிடமும் வெவ்வேறு திகதிகளில் தமது பிறந்தநாளை குறிப்பிட்டுள்ளார்.

மட்டுமின்றி, தமது காதலிகள் ஒவ்வொருவரிடமும் ஆயுள் முழுவதும் ஒன்றாக வாழ்வதாகவும், விட்டுப்பிரிவதில்லை எனவும் உறுதி அளித்துள்ளார்.

ஒவ்வொருவரும் திருமணத்திற்கு அவசரம் காட்டும்போது, இன்னொரு பெண்ணை காதல் வலையில் வீழ்த்துவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

தமது காதலிகளிடம் இருந்து சுமார் 300 டொலர் தொகை அளவுக்கு புதிய உடைகளாகவும் சுமார் 100 டொலர் அளவுக்கு வாழ்த்து அட்டைகளையும் பெற்றுள்ளார்.

ஆனால் பெப்ரவரி மாதம் ஒரே புகைப்படத்தை குறிப்பிட்டு பல பெண்களால் புகாரளிக்கப்பட்ட நிலையில், பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து திட்டமிட்டு ஏமாற்றிய குற்றத்திற்காக பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here