30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பிரித்தானிய அரசின் முக்கிய அறிவிப்பு!

0

பிரித்தானியாவில் 70-க்கும் மேற்பட்டவர்கள் மற்றும் ஐரோப்பாவில் 17-0க்கும் மேற்பட்டோர் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி செலுத்திக்கொண்டதால் இரத்த உறைவு பிரச்சினை உட்பட அரிய பக்க விளைவுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அவர்களை சோதனை செய்த ஐரோப்பாவின் மருந்துகள் சீரமைப்பு நிறுவனமான European Medicines Agency (EMA) அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி போடப்பட்ட 2 வாரங்களில் குறைந்த அளவிலான இரத்த பிளேட்லெட்டுகள் இணைந்து இரத்த உறைவு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரிவித்துள்ளது.

ஆனால், அஸ்ட்ராஜெனேகா தடுப்பசியில் ஆபத்தை விட, அதன் நன்மைகள் மிக அதிகமாக இருப்பதால், அதனைத் தொடர்ந்து பயன்படுத்த பரிந்துரைப்பதாக EMA தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பிரித்தானிய அரசு பாதுகாப்பு காரணங்களுக்காக அதன் 30 வயதுக்கு உட்பட்ட மக்களுக்கு தொடர்ந்து ஆஸ்ட்ரஜனிகா தடுப்பூசியை வழங்க வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளது.

அதற்கு பதிலாக, மாடர்னா அல்லது ஃபைசர் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், இத்தாலி ஒரு படி மேலே சென்று, அதன் 60 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு மட்டுமே அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி வழங்கப்பட முடிவெடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here