30 நாடுகளில் குரங்கு அம்மை தொற்று உறுதி….

0

30 நாடுகளில் குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை ஆயிரத்து 880 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதில், 85 சதவீத பாதிப்பு ஐரோப்பிய நாடுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆப்ரிக்க நாடுகளுக்கு அடுத்தப்படியாக பிரிட்டனில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு அதிகமாக காணப்படுகின்றது.

அங்கு, நேற்று ஒரே நாளில் புதிதாக 50 பேருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனைஅடுத்து, மொத்த பாதிப்பு 574 ஆக அதிகரித்துள்ளது.

இதில், பெரும்பாலான பாதிப்பு ஓரினச்சேர்க்கையாளர்களிடம் கண்டறியப்பட்டுள்ளதாக பிரிட்டன் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here