30 ஆண்டுகளுக்கு பின் கனடாவில் தமிழருக்கு கிடைத்த அதிஷ்டம்….!

0

கனடாவில் ஒன்றாறியோவின் பிராம்டனை சேர்ந்தவர் மனோஹரன் பொன்னுதுரை வயது 54.

இவர் 30 ஆண்டுகளாக லொட்டரி விளையாடி வருகிறார்.

ஒருநாள் மிகப்பெரிய பரிசை கொடுக்கும் அதிர்ஷ்ட சீட்டு தனக்கு வரும் என கனவில் இருந்த பொன்னுதுரைக்கு தற்போது கனவு நினைவாகியுள்ளது.

அதன்படி அவருக்கு லொட்டோ மேக்ஸ் ஜாக்பாட்டில் $70 மில்லியன் பரிசு விழுந்துள்ளது.

சிறிய உற்பத்தி நிறுவனத்தை நடத்தி வரும் பொன்னுதுரை தற்போது பல கோடிகளுக்கு அதிபதியான பின்னரும் தொழில் மற்றும் பணியில் இருந்து ஓய்வுபெற போவதில்லை என தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தனக்கு விழுந்த ஜாக்பாட்டின் காசோலையை ரொறன்ரோவில் உள்ள OLG பரிசு மையத்தில் பெற்று கொண்ட பொன்னுதுரை தெரிவிக்கையில்,

ஒரு நாள் ‘பெரிய’ வெற்றியைப் பெற வேண்டும் என்று பெரும் கனவை கொண்டிருந்தேன், அது நினைவாகியுள்ளது.

என் நிறுவனம் மற்றும் என்னை நம்பி பல பணியாளர்கள் உள்ளனர்.

அதனால் தொழிலை விடும் திட்டமில்லை.

எனது குடும்பத்தின் எதிர்காலம் குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

நாங்கள் எதைச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தாலும், அதை நாங்கள் குடும்பமாக செய்வோம் என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here