3 வருடங்களாக பெண்ணை துன்புறுத்திய ஆவி! வெளியான அதிர்ச்சி தகவல்

0

பிரித்தானியாவில் வாழும் பெண் ஒருவர் கடந்த மூன்று ஆண்டுகளாக ஆவி ஒன்றினால் தான் துன்புறுத்தப்பட்டதாக தெரிவிக்கிறார்.

எசெக்ஸைச் சேந்த Charlene Smith (36) என்ற அந்த பெண்ணுடைய உறவினர் ஒருவர் படிக்கட்டுகளில் உருண்டு விழுந்து இறந்ததைத் தொடர்ந்து, தனது வீட்டில் யாரோ நடமாடுவதை அவர் உணர்ந்திருக்கிறார்.

பொருட்கள் தானே நகர்வதும், ஜன்னல்கள் அடித்துக்கொள்வதுமாக இருந்ததுடன், Charlene மீது நகத்தால் அடிக்கடி கீறல்கள் விழுந்துள்ளன.

ஒரு ஒன்பது மாதங்களுக்கு நிலைமை மிகவும் மோசமாக இருந்துள்ளது. Charleneஐ கீறுவதும், உடையைப் பிடித்து இழுப்பதுமாக தொடர்ந்து அந்த ஆவி தொந்தரவு செய்ய, எங்கே தான் உயரத்திலிருந்து குதித்துவிடுவேனோ என பயத்துடன் இருந்திருக்கிறார் அவர்.

அவரது பிள்ளைகளும் தங்கள் மீது யாரோ உரசிக்கொண்டு செல்வதை உணர்ந்திருக்கிறார்கள்.

ஒருவேளை, இறந்த தன்னுடைய உறவினர் யாரோ தன்னுடன் தொடர்பு கொள்ள முயற்சி செய்கிறாரோ என முதலில் நினைத்திருக்கிறார் Charlene. ஆனால், அந்த ஆவி தன்னை தவறான இடங்களில் தொட முயல்வதை அறிந்ததும் அது வேறு ஏதோ ஒன்று, தன்னை அது விடாப்பிடியாக துரத்துகிறது என்பதை புரிந்துகொண்ட Charlene, ஆவிகளுடன் தொடர்புகொள்பவர்கள் முதல், பாதிரியார்கள் வரை பலரையும் வீட்டுக்கு அழைத்துவந்து அதைத் துரத்த முயல, நிலைமை இன்னமும் மோசமாகியிருக்கிறது.

தூங்கினால் அந்த ஆவி தன்னைத் தொட்டுவிடுமோ என பயந்து சரியாக தூங்கக்கூட செய்யாமல் தவித்திருக்கிறார் Charlene.

இந்நிலையில், Charleneக்கு 2018ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் ஆறாவதாக ஒரு குழந்தை பிறந்திருக்கிறது. Chardonnay என்ற அந்த குழந்தையை வீட்டுக்குக் கொண்டுவந்ததும், சட்டென அந்த தீய ஆவி வீட்டை விட்டு வெளியேறிவிட்டிருக்கிறது. அதற்குப் பிறகு வீட்டில் பெரிய நிம்மதியும் மகிழ்ச்சியும் நிலவுவதாக தெரிவிக்கிறார் Charlene.

ஆகவே, தான் தன் மகள் Chardonnayயை தனது காவல் தேவதை என அழைப்பதாக தெரிவிக்கிறார் Charlene. அவள்தான் எங்களைக் காப்பாற்றினாள், அவள் ஒரு அற்புதம் என்கிறார் Charlene.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here