கனடாவில் வீட்டின் அடித்தளத்தில் குளிரூட்டியில் இருந்து மூன்று வயது சிறுவன் அழுகிய சடலம் மீட்டப்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பில் 30 வயதுடைய சிறுவனின் தாயார் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெட்ராய்டின் மேற்குப் பகுதியில் உள்ள கிராண்ட் ரிவர் அவென்யூ மற்றும் ஃபுல்லர்டன் தெரு சந்திப்பிற்கு அருகில் உள்ள மான்டே விஸ்டா தெருவின் 12700 பிளாக்கில் உள்ள ஒரு வீட்டில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து காவல் துறைத் தலைவர் ஜேம்ஸ் வைட் தெரிவிக்கையில்,
குழந்தைகள் பாதுகாப்புச் சேவையின் அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை காலை வீட்டில் மேற்கொண்ட சோதனையின் போது சிறுவனின் சடலத்தைக் கண்டுபிடித்தனர்.
சிறுவன் எப்படி, எப்போது இறந்தான், அவனது உடல் எவ்வளவு நேரம் குளிரூட்டியில் இருந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இந்நிலையில் சிறுவனின் மரணத்திற்கான காரணத்தையும் கண்டறிய முயற்சியாக பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடத்தப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.