3 வயது சிறுமியை கொதிக்கும் நீருக்குள் வீசி எரிந்த தந்தை….

0

லிபியாவின் Cyrenaica-வில் உள்ள Ajdabiya நகரில் வசிக்கும் Rabiha Khaled Abdel Hamid என்ற 3 வயது சிறுமிக்கு தொடர்ந்து வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளது.

கோபத்தின் உச்சிக்கு சென்ற அந்த சிறுமியின் தந்தை, சிறுமியை கொதிக்கும் சுடு நீர் நிரப்பப்பட்ட குளியல் தொட்டிக்குள் சில மணி நேரம் வைத்துள்ளார்.

சம்பவம் அறிந்த சிறுமியின் உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

ஆனால் சிறுமியின் பின்பகுதியில் பலத்த தீக்காயம் இருந்ததால், அவரைக் காப்பாற்ற முடியவில்லை.

ஆனால், சிறுமி அழுது கொண்டே இருந்ததால், அவர் குளியல் தொட்டிக்குள் போட்டுவிட்டு, அப்படியே சில மணி நேரம் விட்டுள்ளார்.

உறவினர்கள் குறித்த தந்தையிடம் விசாரிக்கையில், அவர் சமயலறையில் இருந்த சுடு தண்ணீர் சிறுமி மீது விழுந்துவிட்டதாக கூறியுள்ளார்.

சந்தேகம் அடைந்த அவர்கள் உடனடியாக இது குறித்து பொலிஸாரிடம் புகார் அளித்தனர்.

இருவரின் பெயர்கள், விவரங்கள் வெளியாகவில்லை.

சிறுமியின் தந்தை போதைக்கு அடிமையானவர், இதில் தாய் உடன் இருந்தாரா? இல்லையா? என்பது தெரியவில்லை.

இருப்பினும் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளதால், இருவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here