3 பெண்களை ஒரே மேடையில் திருமணம் செய்த நபர்!

0

இந்தியாவில் மத்தியபிரதேச மாநிலம் அலிராஜ்பூர் மாவட்டத்தில் பழங்குடியினர் முறைப்படி 42 வயது நபர் ஒருவர் தனது மூன்று லிவ் இன் பார்ட்னர்களை ஒரே மேடையில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

மூன்று பெண்களுக்கும் பிறந்த ஆறு குழந்தைகளும் இந்த திருமண விழாவில் கலந்துகொண்டுள்ளனர்.

மோரி பாலியா கிராமத்தில் நடந்த இந்த வினோத நிகழ்வு, சமூக ஊடகங்களில் மிகவும் பேசப்படும் ஒன்றாக மாறியது.

நெட்டிசன்கள் திருமண கொண்டாட்டங்களின் படங்களைப் பகிர்ந்து வருகிறார்கள்.

தனது திருமண ஏற்பாடுகளை மேற்பார்வையிடுவதற்கும், விருந்தினர்களைப் பராமரிப்பதற்கும் மத்தியில் சர்பஞ்ச் மௌரியா தெரிவிக்கையில்,

போபாலில் இருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நன்பூர் கிராமத்தின் முன்னாள் பஞ்சாயத்து தலைவரான நான், 2003இல் எனது முதல் தாரத்துடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாகவும், கடந்த 15 ஆண்டுகளாக, எனது மற்ற இரண்டு பெண்களும் திருமணமாகமலே என்னுடன் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அங்குள்ள பழங்குடி வழக்கப்படி இந்த திருமணம் மூன்று நாட்கள் நீடித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here