3 திருமணம் செய்து இளைஞர்களை ஏமாற்றிய இளம் பெண்…

0

இந்தியாவில் ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருக்கும் 26 வயது மதிக்கத்தக்க சுஹாசினி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார்.

அதே நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் பணிபுரிந்து வந்த சுனில் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இவர்களின் பழக்கம் நாளைடைவில் காதலாக மாற, அப்போது சுஹாசினி தான் ஒரு அனாதை என்று அவரிடம் கூறியுள்ளார்.

இதை நம்பிய சுனில், தன் குடும்பத்தினரின் ஒப்புதலுடன் கடந்த ஆண்டு சுஹாசினியை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

திருமணத்திற்கு முன்னர், சுனிலிடம் 2 லட்சம் ரூபாய் வாங்கியிருந்துள்ளார்.

திருமணத்திற்கு பின் தன்னை வளர்த்த தாய்மாமன் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால், அவரை பார்த்து விட்டு வருவதாகவும், மருத்துவ செலவிற்கு ஏதேனும் பணம் தேவைப்படும் என்பதால், இரண்டு லட்சம் ரூபாய் தரும்படி சுனில் தந்தையிடம் கேட்டு வாங்கியுள்ளார்.

அதன் பின் இந்த பணம் வாங்கிய விவகாரம் சுனிலுக்கு தெரியவர, இது குறித்து இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

சுஹாசினி, ஒரு கட்டத்தில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து, வீட்டில் இருந்த பணம், நகைகளை எடுத்துக் கொண்டு தப்பியோடியுள்ளார்.

இதனால் உடனடியாக சுஹாசினியின் ஆதார் கார்டில் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு சென்று விசாரித்த போது, சுஹாசினிக்கு ஏற்கனவே நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருடன் திருமணமாகி பெண் குழந்தை இருப்பது தெரியவந்துள்ளது.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சுனில், தான் ஏமாற்றப்பட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பொலிசார் இது குறித்து விசாரித்த போது, இந்த சுஹாசினி வினய் என்பவரை திருமணம் செய்து கொண்டு பண மோசடி செய்ததாக ஏற்கனவே வழக்கு ஒரு பதிவாகியிருப்பது தெரியவர, சுனில் கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here