28 சீன நிறுவனங்கள் மீது தடைவிதித்த அமெரிக்கா…!

0

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் 28 சீன நிறுவனங்கள் மீது அதிரடியாக தடை விதிக்க உத்தரவிட்டுள்ளார்.

இதன்மூலம் மொத்தமாக தடை செய்யப்பட்ட சீன நிறுவனங்களின் எண்ணிக்கை 59ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளின் பாதுகாப்பு அல்லது ஜனநாயக மதிப்புகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அடக்குமுறை அல்லது கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு பயன்படுத்தப்படும் சீன கண்காணிப்பு தொழில்நுட்பத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டிருப்பதாக வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

இதேவேளை ஏற்கனவே சீன இராணுவத்துடன் தொடர்பில் இருப்பதாக கருதப்படும், 31 சீன பெருநிறுவனத்தின் பங்குகளை அமெரிக்க தொழிலதிபர்கள் வாங்கக்கூடாது என முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here