24 வகையான வௌவால்களில் கொரோனா…. பேரதிர்ச்சியில் விஞ்ஞானிகள்…

0

சீனாவில் வௌவால் வைரஸ்கள் குறித்து சர்வதேச விஞ்ஞானிகள் பலர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அவற்றில் ஷான்டோங் மருத்துவ பல்கலை கழகத்தின் பேராசிரியர் ஷி வெய்போங் என்பவர் தலைமையில் அண்மையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில், தென்மேற்கு சீனாவில் இதற்கு முன்பு அறியப்படாத 24 வகையான வௌவால் கொரோனா வைரஸ்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவற்றில் 4 வைரஸ்கள் உலக நாடுகளில் பெருந்தொற்றை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ்களுடன் தொடர்புடையவை என தெரியவந்துள்ளது.

இதேபோன்று ஷாங்காய் நகரை அடிப்படையாகக் கொண்ட விஞ்ஞானி ஒருவர் கொரோனா வைரஸ்களின் வாழ்வியல் குறித்து ஆய்வு மேற்கொண்டதில், வெப்ப மண்டலப் பகுதிகளில் இருந்து பல புதிய வைரஸ்கள் தோன்றியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

வெப்பமான பருவநிலை மற்றும் கைவிடப்பட்ட விலங்கினங்கள் ஆகியவை, வெவ்வேறு வைரஸ்களுடன் போட்டி போட்டு ஒன்றிணைந்து புதிய வகை வைரஸ்களை உருவாக்க அனுமதிக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here