22 நாடுகளுக்கு பயண தடை விதித்த அமெரிக்கா…!

0

கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் 22 நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு பயணிப்பதற்கு எதிராக அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இஸ்ரேல், அவுஸ்திரேலியா, எகிப்து, அல்பேனியா, அர்ஜென்டினா, உருகுவே, பனாமா, கத்தார், பஹாமாஸ், பஹ்ரைன், பெர்முடா, பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகள், சுரினாம், செயிண்ட் லூசியா மற்றும் பொலிவியா உட்பட 22 நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு பயணம் செய்ய வேண்டாம் என அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்கர்கள் குறித்த நாடுகளுக்கு பயணிப்பதை தவிர்க்க வேண்டும் என CDC அறிவுறுத்தியுள்ளது.

CDC-யின் நான்காம் நிலை பட்டியலில் சுமார் 100-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்கள் உள்ளன.

இதனிடையே, CDC அதன் 3 ஆம் நிலை, அதாவது ஆபத்தான நாடுகள் பட்டியில் உகாண்டா, குவைத், ஜமைக்கா, கோஸ்டாரிகா மற்றும் கியூபா உட்பட 20 நாடுகளை சேர்த்துள்ளது.

தடுப்பூசி போடப்படாத அமெரிக்கர்கள் அந்த இடங்களுக்கு அத்தியாவசியமற்ற பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று CDC பரிந்துரைத்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here