21 ஆண்டுகளுக்கு பின் தாயாரை கண்டுபிடித்த பெண்… நெகிழ்ச்சியான சம்பவம்

0

இந்தியாவை சேர்ந்த வாய் பேச முடியாத, காது கேளாத 30 வயதாகும் கீதா கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பு வழி தவறி பாகிஸ்தானுக்கு சென்றுவிட்டார்.

9 வயது சிறுமியாக லாகூர் ரெயில் நிலையத்தில் சம்ஜதா எக்ஸ்பிரஸ் ரெயிலில் தனியாக தவித்து நின்ற அவரை, அங்குள்ள ஒரு தொண்டு நிறுவனம் ஒன்று தத்தெடுத்து வளர்த்தது.

இந்நிலையில் முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜின் முயற்சியால், கடந்த 2015-ம் ஆண்டு அவர் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டார்.

மேலும் அவரது குடும்பத்தை கண்டுபிடிக்க அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் என உறுதி அளித்திருந்தார்.

இதற்காக அவர் உத்தரபிரதேசம், பீகார், தெலுங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு சென்று இருந்தார்

இதில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அவர் பெற்றோரை தேடி மராட்டிய மாநிலம் பர்பானிக்கு வந்தார்.

அப்போது பர்பானி மாவட்டம் ஜின்துரை சேர்ந்த மீனா வாக்மாரே என்ற மூதாட்டி கீதாவை தனது மகள் என உரிமை கோரினார்.

கீதாவின் வயிற்றில் ஒரு தீக்காய தழும்பு இருக்கும் என தன்னார்வ அமைப்பினரிடம் மூதாட்டி கூறியுள்ளார்.

தன்னார்வ அமைப்பினர் சோதனை செய்த போது மூதாட்டி சொல்லியது சரியாக இருந்து உறுதியாகியுள்ளது.

எனவே கீதா அவரது தாயை கண்டுப்பிடித்துவிட்டார் என்றே கூறப்படுகிறது. மீனா வாக்மாரேயை அவர் அடிக்கடி சென்று சந்தித்து மகிழ்ச்சி அடைந்து வருகிறார்.

இந்நிலையில் மீனா வாக்மாரே தான் கீதாவின் தாய் என்பதை உறுதிப்படுத்த டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிட்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here