2022 ஐபிஎல் ஏலத்தில் பெரும் சம்பள பெரும் டாப் 3 வீரர்கள்

0

2022 ஐபிஎல் மெகா ஏலம் நடத்தப்பட்டது.

இந்த ஏலத்தில் பத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்கியுள்ளது.

மெகா ஏலத்தில் பெரும் ஒப்பந்தங்களைப் பெற்றதால், சில வீரர்களின் சம்பளம் பல மடங்கு உயர்ந்தது.

ஐபிஎல் 2022 ஏலத்தில் பெரும் சம்பள உயர்வு பெற்ற டாப் 3 வீரர்கள்

இலங்கை வீரர் ஹசரங்கா ஐபிஎல் ஏலத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியால் ரூ. 10.75 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார்.

இதன்மூலம் மிக அதிகமான சம்பள உயர்வை அவர் பெற்றுள்ளார்.

ஏனெனில், கடந்தாண்டு ஐபிஎல்லில் ஆடம் ஜம்பாவுக்கு மாற்றாக RCB அணியால், ஹசரங்கவின் அடிப்படை விலையான ரூ. 50 லட்சத்துக்கு தான் வாங்கப்பட்டார்.

இதன்மூலம் பல மடங்கு அவர் சம்பளம் உயர்ந்துள்ளது.

ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸால் ரூ 9.80 கோடிக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா வாங்கப்பட்டார்.

கடந்த ஆண்டு KKR அணியில் கிருஷ்ணா இடம்பெற்றிருந்தார்.

அவர் 2018 இல் 20 லட்ச ரூபாய்க்கு KKR அணியில் சேர்ந்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டோனை 2021 இல் ரூ. 75 லட்சத்திற்கு இணைத்துக் கொண்டது.

ஐபிஎல் 2022 ஏலத்தில் லிவிங்ஸ்டோனை வாங்க, அணிகளுக்கு இடையே மிகப்பெரிய ஏலப் போர்த் தூண்டியது.

இறுதியில் அவர் பஞ்சாப் கிங்ஸால் ரூ. 11.50 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here