2022 இல் இலங்கையின் பிரதமராக நாமல் ராஜபக்ஷ – பிரபல ஜோதிடர் ஆரூடம்

0

பிரதமராக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்படுவார் என்ற செய்திகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் நிலையில் அது பற்றி பிரபல ஜோதிடர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
பிரதான அமைச்சுக்களுக்கு பொறுப்பாக உள்ள அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்கள் இலங்கையின் பிரதமராக நியமிக்கப்படுவார் என விஜித ரோஹன விஜயமுனி என்ற அந்த பிரபல ஜோதிடர் தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்ச அவர்கள் 2022ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்திற்குள் பிரதமராக நியமிக்கப்படுவார் என ஜோதிடர் கூறியுள்ளார்.

எனினும் நாமல் ராஜபக்ஷ பிறந்த நேரத்திற்கமைய அவருடைய கிரகங்கள் எதுவும் அன்றைய தினம் சக்தி வாய்ந்தவையாக காணப்படவில்லை என்பதால் இலங்கையின் ஜனாதிபதியாக வரும் அளவிற்கு பலமான கிரக யோகம் எதுவும் இல்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here