2022 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கோப்பை போட்டி அட்டவணை வெளியீடு

0

2022 ஆம் ஆண்டுக்கான ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் நடைபெற இருந்த ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்தத் தொடரில் பிரதான போட்டியில் விளையாடும் ஆறு அணிகள் A , B என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

A பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுடன் தகுதிச் சுற்றில் வெற்றி பெறும் அணிகள் இடம்பெற்றுள்ளன.

B பிரிவில் இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணியுடன் ஒருமுறை மோதும்.

முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேற்றமடையும்.

அதில் லீக் வடிவில் மீண்டும் ஒவ்வொரு அணியும் மோதும்.

அதிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடும்.

இந்தத் தொடரில் விளையாட ஐக்கிய அரபு அமீரகம், குவைத், சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் ஆகிய அணிகள் தகுதிச்சுற்றில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

போட்டி அட்டவணை

பிரிவு A

இந்தியா – பாகிஸ்தான், ஒகஸ்ட் 28 ஆம் திகதி (துபாய்)

இந்தியா – தகுதிச்சுற்று அணி, ஒகஸ்ட் 31 ஆம் திகதி (துபாய்)

பாகிஸ்தான் – தகுதிச்சுற்று அணி, செப்டம்பர் 2 ஆம் திகதி (ஷார்ஜா)

பிரிவு B

இலங்கை – ஆப்கானிஸ்தான், ஒகஸ்ட் 27 ஆம் திகதி (துபாய்)

வங்கதேசம் – ஆப்கானிஸ்தான், ஒகஸ்ட் 30 ஆம் திகதி (ஷார்ஜா)

இலங்கை – வங்கதேசம், செப்டம்பர் 1 ஆம் திகதி (துபாய்)

இறுதிப்போட்டி, செப்டம்பர் 11 ஆம் திகதி (துபாய்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here