2021 ஆம் ஆண்டு இறுதியில் நடைபெற இருந்த உலக அழகி போட்டி, போட்டியாளர்கள் சிலருக்கு கொரோனா ஏற்பட்டதால் ஒத்திவைக்கப்பட்டது.
சான் ஜுவான் நகரில் நடைபெற்ற இறுதி சுற்றில் 40 நாடுகளின் அழகிகள் பங்கேற்றனர்.
இதில், 2019 ஆம் ஆண்டு போலந்து நாட்டு அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கரோலினா பியலவுஸ்கா உலக அழகி பட்டத்தை தட்டிச் சென்றார்.
அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியான ஸ்ரீ சைனி 2வது இடத்தை பெற்றுள்ளார்.
ஐவரி கோஸ்ட் நாட்டின் ஒலிவியா யேஸ் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளார்.
இந்திய அழகி மானசா வாரணாசி 13வது இடத்தைப் பெற்றார்.