2021 ஆஸ்கர் விருது வென்றவர்கள் முழு விவரம்

0

உலகளவில் திரைப்படத் துறையில் மிக உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர் எனும் அகாடமி விருது. இவ்விருது விழா, வழக்கமாக பிப்ரவரி மாதம் நடத்தப்படும். ஆனால் இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக, 93 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா 2 மாதங்கள் தாமதமாக நடத்தப்பட்டது.

உலகமே உற்று நோக்கிய 93-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் இன்றி நடந்தது. இதில் கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 23 பிரிவுகளில் விருது வழங்கப்பட்டது.

நோ மேட்லாண்ட், தி பாதர் படத்தின் போஸ்டர்கள்

ஆஸ்கர் விருதை வென்ற படங்கள், கலைஞர்கள் குறித்த முழுவிவரம் வருமாறு:

சிறந்த படம் – நோ மேட்லாண்ட்

சிறந்த இயக்குனர் – க்ளோயி சாவ் (நோ மேட்லாண்ட்)

சிறந்த நடிகர் – அந்தோணி ஹாப்கின்ஸ் (தி பாதர்)

சிறந்த நடிகை – பிரான்சஸ் மெக்டார்மண்ட் (நோ மேட்லாண்ட்)

சிறந்த ஆவணப்படம் – மை ஆக்டோபஸ் டீச்சர்

சிறந்த வெளிநாட்டு படம் – அனதர் ரவுண்ட் (டென்மார்க்)

சோல், சவுண்ட் ஆஃப் மெட்டல் படத்தின் போஸ்டர்கள்

சிறந்த அனிமேஷன் திரைப்படம் – சோல்

சிறந்த அனிமேஷன் குறும்படம் – இஃப் எனிதிங் ஹேப்பன்ஸ் ஐ லவ் யூ

சிறந்த ஆவண குறும்படம் – கோலெட்

சிறந்த லைவ் ஆக்சன் குறும்படம் – ட்ரூ டிஸ்டேன்ட் ஸ்ட்ரேஞ்சர்

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் – ஆண்ட்ரு ஜாக்சன், டேவிட் லீ, ஆண்ட்ரூ லாக்லே, ஸ்காட் பிஸ்சர் (டெனெட்)

சிறந்த ஒளிப்பதிவாளர் – எரிக் மெசர்ச்மிட் (மங்க்)

மங்க், பிளாக் பாட்டம் படத்தின் போஸ்டர்கள்

சிறந்த படத்தொகுப்பாளர் – மைக்கேல் நெல்சன் (சவுண்ட் ஆஃப் மெட்டல்)

சிறந்த திரைக்கதை – எமரால்டு பென்னல் (பிராமிசிங் யங் வுமன்)

தழுவல் திரைக்கதை – கிறிஸ்டோபர் புளோரியன் (தி பாதர்)

சிறந்த பின்னணி இசை – ட்ரெண்ட் ரென்சர், அட்டிகஸ் ராஸ், ஜான் படிஸ்டி (சோல்)

சிறந்த பாடல் – பைட் ஃபார் யூ

சிறந்த துணை நடிகர் – டேனியல் கல்லூயா (ஜூடாஸ் அண்ட் தி பிளாக் மெசியா)

சிறந்த துணை நடிகை – யூ ஜங் யூன் (மினாரி)

சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் – லோபஸ் ரிவேரா, மியா நில், ஜமிகா வில்சன் (பிளாக் பாட்டம்)

ஆடை வடிவமைப்பு – அன் ரோத் (பிளாக் பாட்டம்)

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு – டொனால்டு கிரஹாம் பர்ட், ஜன் பாஸ்கல் (மங்க்)

சிறந்த ஒலி அமைப்பு – நிகோலஸ் பெகர், ஜேமி பக்‌ஷித், மிட்சல் கவுட்டோலென், கார்லஸ் கார்டெஸ், பிலிப் பிலாத் (சவுண்ட் ஆஃப் மெட்டல்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here