2020 ஒலிம்பிக் போட்டிகளில் முதல் பதக்கத்தை வென்ற கனடா!

0
Canada's Margaret Mac Neil, Rebecca Smith, Kayla Sanchez and Penny Oleksiak show off their silver medals from the women's 4 x 100m freestyle relay during the Tokyo Olympics in Tokyo, Japan on Sunday, July 25, 2021. THE CANADIAN PRESS/ Frank Gunn

ஜப்பானில் டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றது.

அதில் கனடா தனது முதல் பதக்கத்தை வெற்றிப்பெற்றுள்ளது.

பெண்களின் 4 x 100 மீ ஃப்ரீஸ்டைல் ​​ரிலேவில் பென்னி ஒலெக்ஸியாக் (Penny Oleksiak), கெய்லா சான்செஸ் (Kayla Sanchez,), மேகி மேக் நீல் (Maggie Mac Neil), மற்றும் ரெபேக்கா ஸ்மித் (Rebecca Smith) ஆகியோரின் ரிலே அணி முதல் ஒலிம்பிக் பதக்கத்தை பெற்று கனடாவுக்கு பெருமை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கனடாவின் பெண்கள் ரிலே அணி 3 நிமிடம் 32 நொடி மற்றும் 780 மில்லி செகண்டில் (3:32.78) ரிலேவை முடித்து இரண்டாம் இடத்தைப் பிடித்து வெள்ளிப்பதக்கத்தை வென்றது.

மூன்றாம் இடத்தைப் பிடித்து வெண்கல பதக்கம் வென்ற அமெரிக்க பெண்கள் ரிலே அணிக்கும் கனடாவின் மணிக்குமான வெற்றி வித்தியாசம் வெறும் 30 மில்லி செகண்ட் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அணி 3:32.81 நிமிடத்தில் ரிலேவை முடித்து.

அதேபோல் பெண்களுக்கான 4 x 100 மீ ஃப்ரீஸ்டைல் ​​ரிலேவில் தங்கம் வென்ற அவுஸ்திரேலிய அணி 3:29.69 நிமிடத்தில் போட்டியை முடித்தது.

கனடாவிற்கு இது ஒரு பெரிய முன்னேற்றம் என கூறப்படுகிறது.

ஏனெனில் 2016 ஒலிம்பிக்கில் கனடா அணி வெண்கல பதக்கத்தையே பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here